இந்தியக் கடற்படைத் துணைத் தளபதி வைஸ் அட்மிரல் அஜித் குமார் சிறிலங்காவுக்கு நான்கு நாட்கள் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ளார். வைஸ் அட்மிரல் அஜித் குமாருக்கு நேற்று சிறிலங்கா கடற்படைத் தலைமையகத்தில் அணிவகுப்பு மரியாதையுடன் கூடிய வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதையடுத்து, சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சிறிமேவன் ரணசிங்கவைச் சந்தித்து பேச்சு நடத்தினார். பரஸ்பர நலன்களுடன் தொடர்புடைய விவகாரங்கள் குறித்தும், மூலோபாய கடற்படை ஒத்துழைப்புக் குறித்தும் இந்தப் பேச்சுக்களில் கவனம் செலுத்தப்பட்டது. இந்தியக் கடற்படைத் துணைத் தளபதி வைஸ் அட்மிரல் அஜித் குமார் நாளை தமது சிறிலங்கா பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பவுள்ளார்.
Post a Comment