யாழ்.மாநகரசபை ஊழலை விசாரிக்க கோரிக்கை!
யாழ்.மாநகரசபையில் முன்னாள் ஈபிடிபி சார்பு முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி பற்குணத்தால் அரங்கேற்றப்பட்ட ஊழல்முறைகேடுகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள வலியுறுத்தி உள்ளுராட்சி அமைச்சரும் முதலமைச்சருமான சி.வி.விக்கினேஸ்வரனிடம் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள் மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர்.
முன்னணியின் பேச்சாளரும் யாழ்.மாநகரசபை உறுப்பினருமான மணிவண்ணன் தலைமையில் முன்னணியின் ஏனைய உறுப்பினர்களும் இணைந்து மகஜரை கையளித்துள்ளனர்.
யாழ்.மாநகரசபையினை கூட்டமைப்பு ஈபிடிபியுடன் இணைந்து வெற்றி பெற்று தக்கவைத்துள்ள நிலையில் கடந்த கால ஊழல்கள் சர்ச்சைகளினை தோற்றுவிக்கலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.
இதனிடையே வடக்கு மாகாணசபை அவைத்தலைவர் சீ.வீ.கே. சிவஞானத்தின் இல்லதிற்கு சென்ற ஈபிடிபி கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, துணைவியாரின் பிரிவால் துயறிற்றிருக்கும் அவரிற்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளார்.
Post a Comment