Header Ads

test

ரிசாட் பதியூதீன் இன்று முடிவு!


பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் இன்று முடிவு எடுக்கப்படும் என்று அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் எவ்வாறான தீர்மானம் எடுப்பது என்பது குறித்து இன்று அமைச்சர் ரிசாட் பதியூதீன் தலைமையிலான கட்சி உறுப்பினர்கள் தீர்மானிக்க உள்ளனர். நாளை பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நாடாளுமன்றில் விவாத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு வாக்கெடுப்புக்கு விடப்பட உள்ளது.நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவளிப்பதா இல்லையா என்பது குறித்து இதுவரையில், இறுதித் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என கட்சி தெரிவித்துள்து.அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸினை பிரதிநிதித்துவம் செய்யும் ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றில் அங்கம் வகிக்கின்றார்கள்.

No comments