ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் பீடம் இன்று மீண்டும் கூடவுள்ளது
கட்சித் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில், அரசியல் பீட கூட்டம் அலரிமாளிகையில் நேற்று இடம்பெற்றது.
கட்சியின் பதவி நிலைகள் மற்றும் மறுசீரமைப்பு பணிகள் குறித்து இந்த அரசியல் பீடம் அண்மைய நாட்களில் தொடர்ச்சியாக கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், கட்சியின் பதவி நிலைகள் குறித்து இறுதித் தீர்மானம் மேற்கொள்ள இன்றைய தினம் மாலை 5 மணிக்கு மீண்டும் கூடவுள்ளதாக பிரதி அமைச்சர் ஜே.சி. அலவத்துவல தெரிவித்துள்ளார்.
இந்தக் கூட்டத்தின்போது கட்சியின் 26 பதவி நிலைகள் குறித்து தீர்மானிக்கப்பட உள்ளது.
இன்று மேற்கொள்ளப்படவுள்ள இறுதித் தீர்மானங்களை நாளை நடைபெறவுள்ள கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் சமர்ப்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது
Post a Comment