இந்திய நூல் வெளியிடும் யாழ்.முகாமையாளர் சங்கம்!
யாழ்ப்பாணத்தில் செயற்பட்டுவரும் இந்திய துணைத்தூதரக உதவி அமைப்பாள யாழ்.முகாமையாளர் சங்கம் இந்திய பத்திரிகையாளர் தி.இராமகிருஸ்ணன் என்பவர் எழுதிய நூல் ஒன்றை வெளியிட்டு வைக்கவுள்ளது.
ஓர் இனப்பிரச்சினையும் ஓர் ஒப்பந்தமும் எனும் இலங்கை இந்திய ஒப்பந்தத்தை முன்னிறுத்தி எழுதப்பட்ட நூலே வெளியிட்டு வைக்கப்படவுள்ளது.
ஏதிர்வரும் 22ம் திகதி ஞாயிற்றுக்கிழமை வடமாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தலைமையில் இடம்பெறும் வெளியீட்டில் நூல் ஆய்வுரைகளை ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தலைவர் சுரேஸ்பிறேமச்சந்திரன்,வடமாகாணசபை எதிர்கட்சி தலைவர் சி.தவராசா,பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை,கலாநிதி.க.விக்கினேஸ்வரன் உள்ளிட்டவர்கள் ஆற்றவுள்ளனர்.
கருத்துரையினை வடமாகாணசபை உறுப்பினர் க.சிவாஜிலிங்கம் உள்ளிட்டவர்கள் ஆற்றவுள்ளனர்.
Post a Comment