Header Ads

test

மின்னல் ரங்கா ஆசிரியரை தாக்கினாரா?



மன்னார் - பெரியபண்டிவிரிச்சான் பகுதியில் காணி முறுகல் ஒன்று தொடர்பில் முன்னாள் நுவரெலிய மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும்,  தொலைக்காட்சி அரசியல் நிகழ்ச்சி பிரபல தொகுப்பாளருமான மின்னல் ரங்காவினால்  ஆசிரியர் ஒருவர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து குறித்த ஆசிரியர் முருங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மன்னார் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.


காணிப் பிரச்சினை ஒன்று தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரால் தாக்கப்பட்டதாக கூறப்பட்டே குறித்த ஆசிரியர் முருங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


இதனையடுத்து அவரை மேலதிக சிகிச்சைகளுக்காக மன்னார் வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளதாக மன்னார் வைத்தியசாலை தரப்புக்கள் தெரிவித்துள்ளன.


பிரதேச செயலகத்தினால் தமக்கு வழங்கப்பட்ட காணியின் எல்லை தொடர்பில் நீண்டகாலமாக குறித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தமக்கு பிரச்சினையை ஏற்படுத்தி வந்திருந்ததாகவும் இந்தநிலையில் இன்று காலை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தாக்கியதாகவும் சொல்லப்படுகின்றது.

No comments