Header Ads

test

இலங்கைக்கு விஜயம் செய்யும் அமெரிக்க பிரஜைகளுக்கு எச்சரிக்கை


எதிர்வரும் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, அமெரிக்கா, இலங்கைக்கு விஜயம் செய்யும் தமது பிரஜைகளுக்கு பயண எச்சரிக்கையை விடுத்துள்ளது.

கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் இணையத்தளத்தில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் மே மாதம் 1ம் திகதி முதல் 7ம் திகதி வரையான காலப்பகுதியில் பல்வேறு பேரணிகள் இடம்பெறவுள்ளன.

இந்த பேரணிகள் அமைதியான முறையில் நடைபெறும் என்று அமெரிக்க எதிர்பார்க்கின்ற அதேநேரம், பாதை மூடல்கள், வாகன நெரிசல் உள்ளிட்ட விடயங்கள் குறித்து அவதானம் செலுத்தப்பட வேண்டும்.

மேலும் அமெரிக்கப் பிரஜைகள் மேதினக் கூட்டங்கள் மற்றும் பேரணிகள் இடம்பெறும் பகுதிகளை தவிர்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது

No comments