Header Ads

test

இறப்பர் தொழிற்சாலையின் உரிமையாளர் நீதிமன்றில் சரண்


ஹொரண, பெல்லப்பிட்டிய பிரதேசத்தில் உள்ள இறப்பர் தொழிற்சாலையின் உரிமையாளர் ஹொரண நீதவான் நீதிமன்றில் இன்று சரணடைந்துள்ளார். ஹொரண, பெல்லப்பிட்டிய பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலையின் அமோனியா அமிலம் அடங்கிய குழியை சுத்தம் செய்வதற்காக சென்ற ஊழியர் ஒருவர் அந்தக் குழிக்குள் கடந்த 19 ஆம் திகதி விழுந்து உயிரிழந்தார். இதனையடுத்து அவரை காப்பாற்றுவதற்காக சென்ற பிரதேச மக்கள் சிலர் நச்சு வாயுவை சுவாசித்துள்ளதால் பாதிப்படைந்ததுடன், பாதிப்படைந்த 16 பேர் வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தொழிற்சாலையின் ஊழியர் உட்பட பிரதேசவாசிகள் ஐந்து பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments