Header Ads

test

மாமனிதர் சிவராமின் நினைவுநாளை முன்னிட்டு மட்டக்களப்பில் கவனயீர்ப்புப் போராட்டம்!

படுகொலைசெய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் டி.சிவராமின் 13ஆவது ஆண்டு நினைவை முன்னிட்டு, அவரது படுகொலை தொடர்பான விசாரணையினை வலியுறுத்தியும் வட-கிழக்கில் படுகொலைசெய்யப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்குமாறு கோரியும், மட்டக்களப்பில் கவயீர்ப்புப் போராட்டமும் கையெழுத்து வேட்டையும் முன்னெடுக்கவுள்ளதாக, மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் வா.கிருஸ்ணகுமார் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

இந்த கவயீர்ப்புப் போராட்டமும் கையெழுத்து வேட்டையும் எதிர்வரும் சனிக்கிழமை காலை 8.30 மணியளவில் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக நடைபெறவுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ள இந்தப் போராட்டத்தில், அம்பாறை மாவட்ட தமிழ் ஊடகவியாளர் ஒன்றியமும் இணைந்து கொள்கின்றது.

மாமனிதர் சிவராம் மற்றும் ஐ.நடேசன் உட்பட படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் படுகொலை தொடர்பிலான விசாரணைகளுக்காக தனி ஆணையம் அமைத்து, அது தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்குமாறு வலியுறுத்தி, ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அனுப்பிவைக்கும் வகையிலேயே, கையெழுத்து வேட்டை நடாத்தப்படவுள்ளது.

இதில், அனைவரும் கலந்துகொண்டு, தமது ஆதரவை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்..

அன்றையதினம், உயிர்நீர்த்த ஊடகவியலாளர்களை நினைவுகூரும் வகையில், நினைவுச்சின்னம் ஒன்றை மட்டக்களப்பு காந்தி பூங்காவில் அமைக்கும் வகையிலான நடவடிக்கையும், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தால் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.



No comments