சம்பந்தனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை?
எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வருவது தொடர்பில் கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பல்வேறுபட்ட கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். எனினும் அது குறித்து கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்கள் கூட்டத்திலேயே தீர்மானிக்க முடியும் என அவ்வெதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.
கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று கொழும்பு ஸ்ரீவஜிராஷர்ம பெளத்த நிலையத்தில் நடைபெற்றது. அந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,
கடந்த மூன்று ஆண்டுகளில் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தேசியப் பிரச்சினை தொடர்பில் பேசவில்லை. அவர் வடக்கு, கிழக்கிலுள்ள பிரச்சினை குறித்தே கனவம் செலுத்துகிறார்.ஆகவே அவர் எதிர்க்கட்சித் தலைமைக்குப் பொருத்தமற்றவர் எனக் குறிப்பிட்டுள்ளார் பந்துலக குணவர்த்தன.

Post a Comment