தற்போதைய கூட்டு அரசாங்கம் தொடரும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்றிரவு சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நடந்த நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு தோற்கடிக்கப்பட்டதை அடுத்து, கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
”கூட்டு அரசாங்கத்தின் சில உறுப்பினர்களை நாம் இழந்திருக்கிறோம். ஆனால், எஞ்சியுள்ள உறுப்பினர்களுடன் தற்போதைய கூட்டு அரசாங்கம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும். சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை நாளை – வெள்ளிக்கிழமை சந்தித்து இதுபற்றி ஆராயப்படும்.” என்றும் அவர் தெரிவித்தார்
Post a Comment