Header Ads

test

இலங்கையில் மதுக்கடைகள் ஒரு வாரத்திற்கு மூடல்!!

வெசாக்கை முன்­னிட்டு நாட­ளா­விய ரீதி­யில் ஒரு வாரத்­துக்கு மது­பான விற்­பனை நிலை­யங் களை மூடுவதற்கு இலங்கை மது வரித்­தி­ணைக்­க­ளம் தீர்­மா­னித்துள்­ளது.

இலங்கை மது வரித்­தி­ணைக்­கள ஜென­ரல் ஆர். சேம­சிங்­க­வின் ஆலோ­ச­னை­யின் கீழ் இந்­தச் செயற்திட்­டம் செயற்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளது.

மது வரித்­தி­ணைக்­க­ளத்­தால் எடுக்­கப்­பட்­டுள்ள இந்­தத் தீர்­மா­னத்­துக்கு எதி­ரா­கச் செயற்­ப­டு­ப­வர்­க­ளுக்கு கடும் சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும் என்­றும், அப­ரா­த­மும் விதிக்­கப்­ப­டும் என­வும் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.
இந்த மாதம் 27 ஆம் திகதி முதல் மே மாதம் 3 ஆம் திகதி வரை அனு­ம­திப்­பத்­தி­ரம் அற்ற மது விற்­பனை நிலை­யங்­களை மூடு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளன. இதற்­காக மது வரித்திணைக்­க­ளத்­தின் சட்ட செயற்­ப­டுத்­தல் பிரி­வின் கீழ் சிறப்பு அதி­கா­ரி­கள் கொண்ட குழு­வும் நியமிக்கப்படவுள்­ளன.

இந்த நடை­மு­றை­களை மீறி செயற்­ப­டு­ப­வர்­கள் தொடர்­பில் பொது மக்­கள் மது வரித்­தி­ணைக்­க­ளத்­துக்கு அறி­யத்­த­ரு­வ­தன் மூலம் இதனை சிறப்­பாக முன்­னெ­டுக்க பொது மக்­க­ளின் ஒத்­து­ழைப்­பும் கோரப்பட்டுள்ளன.

சட்­ட­வி­ரோ­த­மாக மது விற்­ப­னை­யில் ஈடு­ப­டு­ப­வர்­கள் தொடர்­பில் தக­வல்­களை தெரி­விப்­ப­தற்­காக 24 மணித்­தி­யால விசேட சேவை செயற்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளது.

சட்ட விரோத மது பான விற்­ப­னை­யில் ஈடு­ப­டு­ப­வர்­கள் தொடர்­பாக 011-2045077 என்ற தொலை­பேசி இலக்­கத்­தின் மூல­மும், 011-2877882 என்ற தொலை­ந­கல் இலக்­கத்­தின் மூல­மும் அறி­யத்­தர முடி­யும் என தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

No comments