நாட்டுப்பற்றாளர் நாள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் முன்னெடுப்பு!


தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் திருமதி வாசுகி சுதாகரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அன்னை பூபதியின் பேர்த்தியான திருமதி கோபிதாஸ் குணோஸ்வரி பொதுச்சுடரினை ஏற்றிவைத்தார்.

அகவணக்கத்தைத் தொடர்ந்து அன்னை பூபதியின் திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அன்னை பூபதியின் பேர்த்தியான திருமதி கோபிதாஸ் குணோஸ்வரி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பொதுச் செயலாளர் செ.கஜேந்திரன் ஆகியோர் மலர்மாலை அணிவித்தனர்.
அதனையடுத்து மலர்சலியும் நினைவுரைகளும் இடம்பெற்றன.
Post a Comment