Header Ads

test

வடக்குடன் தொடர்பில்லாதவர்கள், குடியேற்றப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாது


வட மாகாணத்துக்கு தொடர்பில்லாத மக்கள் அங்கு குடியேற்றப்படுவது, ஏற்றுக் கொள்ளப்பட முடியாத விடயம் என்று, வட மாகாண விவசாயத்துறை அமைச்சர் க.சிவநேசன் கோரியுள்ளார்.

வடமாகாண விவசாயத் திணைக்களம், மத்திய விவசாயத்திணைக்களம் மற்றும் கமநல அபிவிருத்தி திணைக்களம் என்பன இணைந்து நடத்தும் "ஒன்றாய் எழுவோம், சிறுபோகத்தை வெல்வோம்" என்ற தொனிப்பொருளிலான விவசாய ஊக்குவிப்பு வேலைத்திட்டம் ஒட்டுசுட்டானில் ஆரம்பிக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் உரையாற்றிய வடமாகாண அமைச்சர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

அதேநேரம், நீர்முகாமைத்துவத்தை சரியாக பின்பற்றினால், வடமாகாணத்துக்கு மஹாவலி நீர் அவசியமில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

No comments