முதலமைச்சர் கதிரை:கருமத்திற்கு காத்திருக்க சொல்கிறார் சாம்!
வடக்கு மாகாண சபையின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை பொறுத்த நேரத்தில் அறிவிப்போம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
திருகோணமலையில் ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண சபையின் ஆயுள் காலம் எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 25ஆம் திக தியுடன் முடிவடைகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு முதலமைச்சராகத் தெரிவு செய்யப்பட்ட சி.வி.விக்னேஸ்வரன், அடுத்த மாகாண சபைத் தேர்தலில் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட மாட்டார் என்பதை அந்தக் கட்சியின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்திருந்தார்.
கூட்டமைப்பின் சார்பில் அடுத்த முதலமைச்சர் யார் என்பது தொடர்பில், கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் செய்தியாளர்களால் கேள்வி எழுப்பப்பட்டது.
“முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் உத்தியோகபூர்வ முடிவு எதனையும் இப்போது எடுக்கவில்லை. எனினும் பொறுத்த நேரத்தில், பொருத்தமான வேட்பாளரையே நாம் களமிறக்குவோம்”- என்று இரா.சம்பந்தன் பதிலளித்தார்.
Post a Comment