கட்சி மறுசீரமைப்பிற்காக இன்று மீண்டும் கூடும் ஐ.தே.க
10 பேர் கொண்ட இந்த அரசியல் பீடம் இன்று பிற்பகல் 3.30 அளவில் அலரிமாளிகையில் கூடவுள்ளதாக பிரதி அமைச்சர் ஜே.சி. அலவத்துவல தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு முன்னர் கட்சியில் ஏற்படுத்தப்பட உள்ள மாற்றங்கள் குறித்து இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த கூட்டத்தில் மேற்கொள்ளப்பட உள்ள தீர்மானங்கள் எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி கொழும்பு சுகததாஸ உள்ளக அரங்கில் இடம்பெற உள்ள கட்சியின் மே தினக் கூட்டத்தில் அறிவிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
Post a Comment