Header Ads

test

வாக்கெடுப்பு முடிந்ததும் விகாரைக்கு ஓடிய ரணில்


கூட்டு எதிரணியினரால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையைத் தோற்கடித்த பின்னர், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கங்காராமய விகாரைக்குச் சென்று வழிபாடு நடத்தினார். சிறிலங்கா பிரதமருக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை 46 வாக்குகளால் தோல்வியடைந்தது. நேற்றிரவு 9.30 மணியளவில் ஒவ்வொருவராக பெயர் அழைத்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. முடிவு சுமார் அரை மணிநேரத்தில் அறிவிக்கப்பட்டு, நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, உடனடியாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மைத்ரி விக்கிரமசிங்கவுடன், கங்காராமய விகாரைக்குச் சென்று வழிபாடு நடத்தினார். அவருடன் பெருமளவான ஐதேக ஆதரவாளர்களும் அங்கு குழுமியிருந்தனர்.

No comments