Header Ads

test

கண்டி மோதல் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணைகள் ஆரம்பம்


கண்டி மாவட்டத்தின் பல பகுதிகளில் கடந்த மார்ச் மாதம் ஏற்பட்ட மோதல் சம்பவங்கள் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது.

அதன்படி, குறித்த பகுதிகளுக்கு விஜயம் செய்து தகவல்களை பெற்றுக் கொள்ள ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

மோதல்களில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சம்பவம் தொடர்பில் அக்கறைக் கொண்டவர்களிடம் தகவல்கள் மற்றும் சாட்சிகளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில், சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் இருக்குமாயின் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments