Header Ads

test

கூட்டமைப்பின் முடிவு என்ன?;முடிவுக்காக காத்திருக்கும் பெரும்பான்மை கட்சிகள்


அரசியலில் உச்சக்கட்ட பரப்பரப்பு ஏற்பட்டுள்ள சூழ்நிலையில், அனைத்து தரப்பினதும் கவனமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது குவிந்துள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்றிரவு நடைபெறவுள்ளது. இந்த வாக்கெடுப்பில், பிரேரணைக்கு ஆதரவளிப்பதா – எதிர்ப்பதா என்று ஏனைய கட்சிகள் அனைத்தும் முடிவுகளை எடுத்து விட்ட போதும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னமும் எந்த முடிவையும் எடுக்கவில்லை. ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், சுமந்திரன் உள்ளிட்ட பெரும்பாலான உறுப்பினர்கள் வலியுறுத்தியதாக தெரிகிறது. அதேவேளை, நம்பிக்கையில்லா பிரேரணை வாக்கெடுப்பின் போது நடுநிலை வகிக்க வேண்டும் என்று மற்றொரு தரப்பு உறுப்பினர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். இதனால், இன்று காலை 10 மணியளவில் மீண்டும் கூடி ஆராய்ந்து, இறுதியான முடிவை எடுப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

No comments