சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு புதிய பொதுச்செயலாளர் நியமிக்கப்பட வேண்டும் என்று, அண்மையில் கூட்டு அரசாங்கத்தில் இருந்து விலகிய சிறிலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர, ”ஐதேகவுக்கு பின்னால் இருந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலர் துமிந்த திசநாயக்க தொடர்ந்தும் அந்தப் பதவியில் இருக்க முடியாது. எனவே அண்மையில் அரசாங்கத்தில் இருந்து விலகிய சிறிலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்கள், புதிய பொதுச்செயலரை நியமிக்க வேண்டும் என்று அழுத்தங்களைக் கொடுக்கவுள்ளனர். சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பியதும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் நடத்தப்படும். அதில், கூட்டு அரசாங்கத்தில் இருந்து சிறிலங்கா சுதந்திரக் கட்சி வெளியேற வேண்டும் என்றும், நாங்கள் அழுத்தங்களைக் கொடுப்போம்” என்றும் கூறியுள்ளார்
Post a Comment