நாடாளுமன்றத்தை முடக்கி வைக்கும் சிறிலங்கா அதிபரின் உத்தரவு, அரசாங்கத்தின் செயற்பாடுகளில் எந்த பாதகமான தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சிறிலங்கா அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் சுதர்சன குணவர்த்தன வெளியிட்டுள்ள அறிக்கையில், “அடுத்த நாடாளுமன்ற அமர்வு மே 8ஆம் நாள் ஆரம்பமாகிறது. அரசியலமைப்பின் 70(4) ஆவது பிரிவின் கீழ், நாடாளுமன்றத்தின் முன் கொண்டு வரப்பட்ட அனைத்து விடயங்களும், நாடாளுமன்ற முடக்கத்தின் கீழ் நீக்கப்படவில்லை. இதனால் அடுத்த அமர்வில் அவை தொடரக் கூடும். எனவே, அரசாங்கத்தின் செயற்பாடுகளில் இந்த முடக்கத்தினால் பாதகமான தாக்கங்கள் ஏற்படாது” என்று கூறியுள்ளார்.
Post a Comment