Header Ads

test

காட்டிக் கொடுத்தவர்கள் இனத் துரோகிகள்! - சுசில் பிரேமஜெயந்த


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் இருக்கும் துரோகிகளை அம்பலப்படுத்த உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.“பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தை தோற்கடிப்பதன் பின்னணியில் செயற்பட்ட துரோகிகள் யார் என்பது வெளிப்படுத்தப்படும். நாட்டுக்கு தேவையான மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் நான் உள்ளிட்ட 16 சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் முன்னெடுத்த முயற்சியை சிலர் காட்டிக் கொடுத்து விட்டனர். இவ்வாறு காட்டிக் கொடுத்தவர்கள் இனத் துரோகிகளாகவே அடையாளப்படுத்தப்பட வேண்டும். நாட்டு மக்கள் இவ்வாறான துரோகிகளுக்கு நல்லதொரு பாடத்தை கற்பித்துக் கொடுப்பார்கள். இந்த துரோகிகள் தொடர்பில் நாடு முழுவதிலும் உள்ள கட்சியின் ஆதரவாளர்களுக்கு தெளிவுபடுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்படும். சுதந்திரக் கட்சியும், கூட்டு எதிர்க்கட்சியும் இணைந்து செயற்படுவதற்கு எவ்வித தடையும் கிடையாது எனவும் குறிப்பிட்டுள்ளார்

No comments