ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்று
ஜனாதிபதி தலைமையில், ஜனாதிபதி மாளிகையில் இந்த சந்திப்பு இரவு 7 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.
பிரதருக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணையை ஆதரித்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்கள், தமது பதவிகளில் இருந்து விலகுவதா ? இல்லையா என்பது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்வதற்கான கட்சியின் விசேட மத்திய குழுக் கூட்டம் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றது.
அவநம்பிக்கை பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினருடன் இணைந்து அரசாங்கத்தில் தொடர்ந்தும் செயற்பட முடியாது என ஐக்கிய தேசியக் கட்சி அமைச்சர்கள் குழுவொன்று ஜனாதிபதியிடம் தெரிவித்திருந்தது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட கட்சியின் அமைச்சர்கள் சிலர் ஜனாதிபதியை சந்தித்தபோதே அவர்கள் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன், அவநம்பிக்கை பிரேரணையை ஆதரித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் சிலர் நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தைக் புறக்கணித்திருந்தனர்.
இந்த நிலையில், குறித்த விடயங்கள் தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்று மீண்டும் கூடவுள்ளது.
இதன்போது ஒரு தீர்க்கமான முடிவு எடுக்கப்படும் என கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன
Post a Comment