அடுத்த மாகாண சபைத் தேர்தல் தொடர்பில், வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் எதிர்வரும் 12ம் திகதி விசேட விளக்கம் ஒன்றை வழங்கவுள்ளார். அடுத்த மாகாண சபைத் தேர்தலின் போது, வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராக, தற்போதைய முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் நியமிக்கப்பட மாட்டார் என்று, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் கூறி இருந்தார். இதற்கான பதிலை தாம் எதிர்வரும் 12ம் திகதி வெளியிடவிருப்பதாக விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். அதேநேரம், வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், இரண்டு வார பயணம் மேற்கொண்டு இன்று இந்தியா செல்கிறார். தனிப்பட்ட விஜயமாக இது அமைந்துள்ள போதும், அரசியல் ரீதியான சந்திப்புக்களும் இடம்பெறும் என அவர் கூறினார். எனினும், விஜயத்தின் நிறைவிலேயே அது குறித்து தெரிவிக்க முடியும் என்றும் விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.
Post a Comment