முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் பின்னரே மீள்திறப்பு!
யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம், தொடர்ந்தும் அடுத்து வரும் மூன்று வாரங்களிற்கு மூடப்பட்டிருக்குமென தெரியவருகின்றது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் பின்னராக வரும் 21ஆம் திங்கட்கிழமை திகதி அது மீளத்திறக்கப்படவுள்ளதென, வளாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம், வளாகத்தில் அத்துமீறி பௌத்த விகாரையொன்றை பிரதிஸ்டை செய்வதற்கு, சிங்கள மாணவர்கள் முயன்றதால், வளாகத்தில் குழப்ப நிலை ஏற்பட்டது. காவல்துறை தலையிடும் வரையில் நிலவரம் சென்றிருந்தது.
இதையடுத்து, காலவரையறையின்றி வளாகத்தை மூடுமாறு, வளாகத்தின் முதல்வர் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு கடந்த ஆண்டிலும் ஏற்பட்ட குழப்பங்களை கருதி மீள்திறப்பினை மே 21ம் திகதிவரை பிற்போட்டிருப்பதாக தெரியவருகின்றது.
Post a Comment