Header Ads

test

சிறீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த மூவர் கட்சி தாவல்?

அரசாங்கத்திலிருந்து, ஏப்ரல் 11ஆம் திகதியன்று இராஜினாமா செய்துகொண்ட சுதந்திரக் சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 16 பேரில், மூவர், நல்லாட்சி அரசாங்கத்துடன், இணைவதற்கு இரகசியப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளனர் எனத் தெரியவருகின்றது.

முன்னாள் இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்கள் மூவரே, இவ்வாறு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளார்​களெனத் தகவல் தெரிவிக்கின்றது.   அடுத்த வாரத்துக்குள் அறிவிக்கப்படவுள்ளதாகக் குறிப்படும், புதிய அமைச்சரவையில், அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொள்ளும் நோக்கிலேயே, இந்த மூவரும் காய்நகர்த்தலை ​மேற்கொண்டுவருகின்றனர் என அறியமுடிகின்றது.

No comments