Header Ads

test

கிளிநொச்சியில் முன்னாள் போராளி கைது


கிளிநொச்சிப் பகுதியில், விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்ட முன்னாள் போராளி வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே, கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் தோண்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளால் போரின் இறுதியில் கொள்கலன் ஒன்றில் ஆயுதங்கள், வெடிபொருட்கள் புதைக்கப்பட்டதாக கூறிய தகவலின் அடிப்படையிலேயே சிறிலங்கா படையினர், காவல்துறையினர், சிவில் பாதுகாப்பு படையினர் இணைந்து தோண்டும் நடவடிக்கைகளை முன்னெடுத்தனர் என்று சிறிலங்கா காவல்துறை கூறியுள்ளது. நேற்றுமுன்தினமும், நேற்றும் இந்த தோண்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதேவேளை, கைது செய்யப்பட்ட முன்னாள் போராளி யார், அவர் எதற்காக கைது செய்யப்பட்டார், யாரால் கைது செய்யப்பட்டார், எங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்ற எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

No comments