Header Ads

test

விடுவிக்கப்படுவதாக கூறப்பட்ட காணியின் வரைப்படம் கிடைக்க வில்லை


யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தில் இருந்து விடுவிக்கப்படுவதாக கூறப்பட்ட காணியின் வரைப்படம் தமக்கு கிடைக்க வில்லை என யாழ்ப்பாண மாவட்ட செயலக தவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த பகுதியில் 700 ஏக்கர் நிலம் புத்தாண்டு தினத்தில் விடுவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

புத்தாண்டு பரிசாக அதனை விடுப்பதாக, இராணுவ தளபதி மகேஷ் சேனநாயக்க குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், இராணுவத்தினரிடம் இருந்து, குறித்த காணிக்கான வரைப்படங்கள் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திடம் கையளிக்கப்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன

No comments