இரணைதீவு போனார் சுரேஸ்!
இரணைதீவு நிலம் மீட்பு போராட்டத்தில் ஒரு வருடத்திற்கு மேலாக இரணைதீவு மாதா கோயில் துறைமுகத்தில் போராடிய மக்கள் கடந்த சில தினங்களாக இரணைதீவுக்கு சென்று நேரடியாக தாய்மண்ணிலே போராட்டத்தினை தொடர்கின்றனர்.
இந்நிலையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தலைவருமான சுரேஸ்பிறேமச்சந்திரன் போராட்டகாரர்களை நேரில் சந்தித்து கலந்துரையாடி தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
1992 ஆண்டு இராணுவத்தினால் விரட்டியடிக்கப்பட்ட தமிழ் பூர்வீக குடிகள் தொடர்ந்து இரணைதீவில் போராட்டத்தை மேற்கொள்ளப்போவதாகவும் தெரிவித்துள்ளனர்.
Post a Comment