Header Ads

test

கியூபாவில் நிறைவுக்கு வருகிறது காஸ்ரோ குடும்ப ஆட்சி

 கியூபாவில் 60 வருட காஸ்ட்ரோ குடும்ப ஆட்சி நிறைவுக்கு வருகிறது. கியூபாவின் அடுத்த அதிபராக, மிகுயல் டயஸ் கேனல், அந்த நாட்டின் பாராளுமன்றத்தினால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

தற்போது அதிபராகவுள்ள ராவுல் கஸ்ட்ரோ ஓய்வு பெறவுள்ளதால், அந்த இடத்திற்கு மிகுயல் டயஸ் கேனல் செயற்படவுள்ளார்.

ஃப்டல் காஸ்ட்ரோவின் ஓய்வுக்குப் பின்னர் அவரது சகோதரரான ராவுல் காஸ்ட்ரோ, அந்த நாட்டின் அதிபராகப் பொறுப்பேற்றார். அவரது காலத்திலேயே அமெரிக்காவுடனான கியூபாவின் உறவு புத்தாக்கம் பெற்றது. இந்த நிலையில், தற்போது அவரது ஓய்வு குறித்த அறிவிப்பு வெளியாக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும், ராவுல் காஸ்ட்ரோ எதிர்வரும் 2021ம் ஆண்டு வரையில் கமியுனிச கட்சியின் தலைவராக செயற்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments