சமாதானம் வேண்டி மீண்டும் யாத்திரை!
இலங்கையில் சமாதானம், நல்லிணக்கம், இனங்களுக்கிடையே பேதங்கள் நீங்கி ஒற்றுமை வளர இறையருள் வேண்டி புனித திருத்தல யாத்திரை இன்று (19) யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தன் ஆலயத்துக்கு முன்பாக இன்று (19) காலை ஆரம்பிக்கப்பட்ட இந்த யாத்திரை மூன்று நாட்கள் இடம்பெற்று சிவனொளிபாதமலையை சென்றடையவுள்ளது.
இந்துசமய தொண்டர் சபை, சின்மியாமிசன் ஆகியன இணைந்து முன்னெடுத்துள்ள இந்த யாத்திரையை யாழ்ப்பாணம் நாக விகாரை விகராதிபதி, யாழ்ப்பாணம் சின்மியாமிசன் சுவாமிகள் ஆகியோர் இணைந்து ஆரம்பித்து வைத்தனர்.
Post a Comment