ரெஜினோல்ட் கூரே மத்திய மாகாணத்திற்கு!
வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே மத்திய மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.இதனையடுத்து ஏற்பட்டுள்ள வெற்றிடத்தின் மத்தியில் வடமாகாண ஆளுநராக எவரும் நியமிக்கப்பட்டிருக்கவில்லை.
வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநர் நியமனத்தில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இதுவரை காலமும் ஆளுநராகக் கடமையாற்றிய ரெஜினோல்ட் குரே மத்திய மாகாணத்துக்கு இடமாற்றப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைத் தவிர்த்து 7 மாகாணங்களுக்கு இன்று புதிய ஆளுநர்கள் அரச தலைவரால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேல் மாகாணத்துக்கு ஹேமகுமார நாணயக்காரவும், வட மேல் மாகாணத்துக்கு – கே.சி. லோகேஸ்வரனும், சப்ரகமுவ மாகாணத்துக்கு – திருமதி. நீலூகா ஏக்கநாயக்கவும், மத்திய மாகாணத்துக்கு ரெஜினோல்ட் குரேவும், தென் மாகாணத்துக்கு – மார்ஷல் பெரேராவும், வட மத்திய மாகாணத்துக்கு – எம்.ஜி. ஜயசிங்கவும், ஊவா மாகாணத்துக்கு பி.பீ. திஸாநாயக்கவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை வடக்கு மாகாண ஆளுநராக கே.சி. லோகேஸ்வரன் நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும் அவர் வட மேல் மாகாணத்துக்கு ஆளுநராக இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.
Post a Comment