Header Ads

test

நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ள இராமேஸ்வர மீனவர்கள்


இலங்கை கடற்பரப்பில் அத்து மீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டதாக தெரிவித்து கைது செய்யப்பட்ட இராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் 19 பேர் இன்று மீண்டும் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

கடந்த 30 ஆம் திகதி இராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் நான்கு படகுகளில் இலங்கை கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுக்கொண்டிருந்த வேளையில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள், மன்னார் காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டதன் பின்னர் நீதிமன்றில் முன்னிலை படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதற்கமையவே தமிழக மீனவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது

No comments