வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களுக்கு அரசாங்கம் அறிக்கை ஒன்றின் ஊடாக எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்காலிக மற்றும் ஒப்பந்த அடிப்படையிலான ஊழியர்கள் எதிர்வரும் 17ஆம் திகதிக்கு முன்னர் பணிக்கு திரும்பாவிட்டால் அவர்கள் பணியில் இருந்து சுயமாக விலகிக்கொண்டதாக கருதப்படுவார்கள் என உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நிரந்தர நியமனம் பெற்ற ஊழியர்கள், 17ஆம் திகதிக்கு முன்னர் பணிக்கு திரும்பாவிட்டால், அவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட காலத்துக்குறிய சம்பளத்தை வழங்காதிருப்பது தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கல்விசாரா ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருப்பதாகவும், இதனால் அனைத்து ஊழிர்களும் பணிக்கு திரும்பவேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Post a Comment