Header Ads

test

கொக்கிளாய் விகாரை இவ்வளவு பெரிதா?;அதிசயித்த வடமாகாணசபை!


கொக்கிளாய் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுவரும் விகாரையை முதன்முதலாக வடமாகாணசபை உறுப்பினர்களில் பலர் இன்று அதிர்ந்து வாயதிறந்த நிலையில் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். 


தமது ஆட்சிக்காலத்தின்  இறுதி சந்தர்ப்பத்தில் முன்முறையாக எல்லைக்கிராமங்களிற்கான பயணமொன்றை மேற்கொண்ட வடமாகாணசபை உறுப்பினர்கள் அங்கு அத்துமீறி தமிழர் காணியில் கட்டப்பட்டுவரும் விகாரையினை பார்வையிட்டதுடன் அதன் விகாராதிபதியையும் சந்தித்து பேசியிருந்தனர்.


முன்னதாக குறித்த விகாரை பிரதேச செயலாளரின் அனுமதியுடனே கட்டப்படுகின்றது. அத்துடன் அதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கும் வாபஸ் பெறப்பட்டுள்ளது என வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்திருந்த நிலையில் வடமாகாணசபை உறுப்பினர்கள் வாய்பிளந்து அதன் பிரமாண்டத்தை பார்வையிட்டுள்ளனர்.


இதனிடையே வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் சட்டவிரோதமாக அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டுள்ள சிங்கள மீனவர்களையும் பார்வையிட்டிருந்தனர்.ஆனால் அவர்களோ இவர்கள் முன்பதாக அச்சமின்றி இவர்களை இஞ்சியனவேனும் பொருட்படுத்தாது தொழிலில் ஈடுபட்டிருந்தனர்.


முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குளாயில் நாயாறு முதல் முகத்துவாரம் வரையில் அத்துமீறி சட்ட விரோத தொழிலில் தென்னிலங்கை சிங்கள மீனவர்கள் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில் இன்று முல்லைதீவு சென்றுள்ள மாகாண சபையினர் சட்டவிரோத மற்றும் அத்து மீறி தொழில் நடவடிக்கைகளை பார்வையிட்டிருந்தனர்.


இதன் போதும் எந்தவித அச்சமோ சலசலப்போ இல்லாமல் சிங்கள மீனவர்கள் சட்ட விரோத தொழிலில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments