வடமாகாண ஆளுநர் கூரே:மாற்றமில்லையென்கிறார் மைத்திரி!
இலங்கை முழுவதுமுள்ள மாகாணசபைகளது ஆளுநர்களை இடமாற்றம் செய்யும் முயற்சியை இலங்கை ஜனாதிபதி கைவிட்டுள்ளார்.அவ்வகையில் வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே அந்தப் பதவியில் நீடிப்பார் என அறிய முடிகிறது.
அண்மையில் இலங்கை ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற ஆளுநர்கள் மாநாட்டின் போது ஆளுநர்களது இடமாற்றம் பற்றி பிரஸ்தாபிக்கப்பட்டிருந்தது.அப்போது மேல் மாகாண ஆளுநர் கே.சி.லோகேஸ்வரன் வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பின்னராக மைத்திரி இதனை கண்டுகொள்ளவில்லை.
இதனையடுத்து வடமாகாண ஆளுநராக றெஜினோல்ட் குரேயே நீடிப்பார் என்பது உறுதியாகியுள்ளது.
முன்னதாக ஒவ்வொரு மாகாணங்களின் ஆளுநர்களுக்கும்இ விருப்ப அடிப்படையில்இ இடமாற்றங்களை வழங்க அரசு திட்டமிட்டது. இந்த மாற்றங்களுக்கமையஇ மேல் மாகாண ஆளுனர்இ கே.சி.லோகேஸ்வரன்இ வட மாகாண ஆளுநராக மாற்றம் பெற விருப்பம் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் 9 மாகாணங்களின் ஆளுநர்களையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் சந்தித்திருந்த போது வடக்கு மாகாண ஆளுநராக றெஜினோல்ட் குரே நீடிப்பார் என உறுதிப்படுத்தப்பட்;டுள்ளது.
Post a Comment