Header Ads

test

ஈபிடிபியொன்று எனக்கு கொம்பல்ல:ஏ.சுமந்திரன்!

பேச்சு வார்த்தை நடத்தக்கூடிய அளவிற்கு ஈபிடிபி எனக்கொன்றும் பெரியகட்சியல்ல.அது பற்றி பேசுவது வீணான நேரத்தை செலவழிக்கும் செயல் என தெரிவித்துள்ள தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.சுமந்திரன் வடக்கு மாகாண சபையின் அடுத்த முதலமைச்சராக போட்டியிடும்  எண்ணம் தனக்கில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

வடக்கின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளராக நீங்கள் போட்டியிட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளதேயென ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த எம்.ஏ.சுமந்திரன் நான் போட்டியிடுவதாக வந்த செய்திகளில் உண்மையில்லை. ஏனெனில் அவ்வாறு போட்டியிடும் எண்ணம் எனக்கும் இல்லை. அதேபோன்று கட்சிக்கும் அவ்வாறானதொரு எண்ணம் கிடையாது எனவும் தெரிவித்தார்.


அதேபோன்று உள்ளுராட்சி சபைகளை கைப்பற்ற ஈபிடிபியுடன் இரகசிய பேச்சுக்கள் நடத்தப்பட்டமை தொடர்பான சான்றுகள் இருப்பின் அதனை அவர்கள் வெளிப்படுத்தவும் ஏ.சுமந்திரன் சவால் விடுத்துள்ளார்.

No comments