Header Ads

test

வௌிநாட்டு சுற்றுலா பயணிகளை தாக்கிய சம்பவம் - மேலும் மூவர் கைது


மிரிஸ்ஸ கடற் கரைப் பகுதியில் கடந்த 8 ஆம் திகதி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை தாக்கிய சம்பவம் தொடர்பில் மேலும் 3 சந்தேகத்துக்குரியவர்கள் வெலிகம காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மிரிஸ்ஸ பிரதேசத்தில் வைத்து அவர்கள் கைதுசெய்யப்பட்டார்கள் என வெலிகம காவல் நிலையத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளனர்.

மிரிஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த சந்கேத்தக்குக்குரியவர்கள், இன்று மாத்தறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர்.

இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் முன்னதாக கைதுசெய்யப்பட்டிருந்த 7 சந்தேகத்துக்குரியவர்களும் இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

No comments