Header Ads

test

உடனடியாக புகையிலை தடைவேண்டாம்:முன்னணி!



உள்ளுராட்சி மன்றங்களில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள் குதித்துள்ளனர்.அவ்வகையில் மாற்று வழிவகைகளை நடைமுறைப்படுத்த முன் புகையிலைத் தடை வேண்டாமென. ஊர்காவற்றுறை பிரதேச சபையில் முன்னணி உறுப்பினர் கே.ஞானேஸ்வரன் கொண்டுவந்த தீர்மானம் இன்று ஏக மனதாக நிறைவேறியுள்ளது.
இன்று நடைபெற்ற ஊர்காவற்றுறை பிரதேச சபைக் கூட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைச் சேர்ந்த புளியங்கூடல் வட்டார பிரதேச சபை உறுப்பினர் கேதீஸ்வரன் ஞானேஸ்வரன் குறித்த தீர்மானத்தை முன்மொழிந்திருந்தார்.
புகையிலையை மட்டுமே நம்பியதாக தீவக விவசாயம் காணப்படும் நிலையில் புகையிலைத் தடையானது தீவகத்தில விவசாயிகளின் இருப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது. மக்களின் வாழ்வாதாரத்தை கண்டுகொள்ளாமல் தடைகளை அமுலாக்குவது சாத்தியமானதல்ல.
எனவே நிரந்தர வாழ்வாதாரத்தை புகையிலைக்கீடாக கொண்டு செல்லக்கூடிய வழிமுறைகளை நடைமுறைப்படுத்தாத வரை புகையிலைத் தடை வேண்டாம். என்ற விடயங்களை உள்ளடக்கியதான மேற்படி தீர்மானம் வாதப்பிரதிவாதங்களையடுத்து ஏகமனதாக சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதன் பிரதிகளை ஜனாதிபதி, பிரதமர்,சுகாதார அமைச்சர், வடக்குமாகாண முதலமைச்சர் ஆகியோருக்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளை பிரதேச சபை மேற்கொண்டுள்ளதாக தெரியவருகின்றது.

No comments