சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 15ஆம் நாள் வெளிநாட்டுப் பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. எனினும் அவர் எந்த நாட்டுக்குப் பயணமாகவுள்ளார் என்று அந்தச் செய்தியில் கூறப்படவில்லை. சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள் குழப்பங்கள் உச்சமடைந்துள்ள நிலையில், சிறிலங்கா அதிபரின் இந்த வெளிநாட்டுப் பயணம் இடம்பெறவுள்ளது. கூட்டு அரசாங்கத்தில் தொடர்ந்து நீடிப்பதா என்று முடிவு செய்வதற்காக நேற்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் நடத்தப்படவிருந்த நிலையில், திடீரென அந்தக் கூட்டம் ரத்துச் செய்யப்பட்டது. இந்த நிலையில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய பின்னரே, சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் நடத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.
Post a Comment