ஊடகவியலாளர் ரூபனின் நினைவேந்தல் !
ஊடகவியலாளர் அமரர் அராலியூர் செ.ரூபனின் எட்டாவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நாளை மறுதினம் 25ம் திகதி புதன்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு பொன்னாலை வெண்கரம் படிப்பகத்தில் ஊடகவியலாளர் ந.பொன்ராசா தலைமையில் நடைபெறவுள்ளது.
யாழ். தினக்குரல் பத்திரிகையின் உதவி ஆசிரியராகப் பணியாற்றிக்கொண்டிருந்த ரூபன், கடந்த 2010 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி சுகயீனம் காரணமாகச் சாவடைந்தார். இவர் உதயன், வலம்புரி, புலிகளின் குரல், ஈழநாதம் ஆகிய ஊடகங்களுக்கும் செய்தியாளராகப் பணியாற்றியிருந்தார்.
இவரது நினைவு தினத்தை முன்னிட்டு வெண்கரம் படிப்பகத்தின் ஏற்பாட்டில் மாணவர்கள் மற்றும் விளையாட்டுக் கழகங்களுக்கு இடையே பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. அதில் வெற்றியீட்டியவர்களுக்கான பரிசில்கள் மேற்படி நினைவேந்தல் நிகழ்வில் வழங்கப்படும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Post a Comment