இலங்கை வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றுவதில் தாமதம்
ஐரோப்பிய ஒன்றியத்தின் சர்வதேச வர்த்தக விவகாரங்கள் குழுவைச் சேர்ந்த ஆறு பேர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.
அவர்கள் நேற்று கருத்து வெளியிடும் போது இந்த விடயத்தைக் கூறியுள்ளது.
முன்னுரிமை வழங்கலின் பொதுமைப்படுத்தப்பட்ட முறைமையான ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகை இலங்கையின் பொருளாதாரத்துக்கு அத்தியாவசியமானதாகும்.
இதன் அடிப்படையிலேயே இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மேலோங்கி இருக்கிறது.
ஆனால் இந்த வரிச்சலுகையை மீளப் பெற்றுக் கொள்வதற்காக வழங்கப்பட்ட உறுமொழிகளை அமுலாக்குவதற்கான வாய்ப்பினை தவறவிடக் கூடாது என்று அந்த குழு அறிவித்துள்ளது.
குறிப்பாக சர்வதேச மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர் உரிமைகள் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அந்த குழு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, இலங்கையில் எவ்வாறு ஜனநாயகம் தொழிற்படுகிறது என்பதைற்கு, கடந்த தினம் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்ட அவநம்பிக்கைப் பிரேரணை ஒரு சிறந்த எடுத்துக் காட்டு என்று ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இலங்கை வந்துள்ள ஐரோப்பிய ஒன்றியக் குழுவின் தலைவர் ஜான் சஹ்ராடில் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவநம்பிக்கை பிரேரணை ஒன்றை முன்வைப்பதற்கான முழு உரிமையும் எதிர்கட்சிக்கு இருக்கிறது.
அவ்வாறான பிரேரணையில் இருந்து பாதுகாப்பு பெறும் உரிமை அரசாங்கத்துக்கு இருக்கிறது.
இந்த இரண்டுமே இடம்பெற்றுள்ளமையானது, இலங்கையில் ஜனநாயகம் தொழிற்படுவதாக உணர்த்துகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்
Post a Comment