மும்பையை வீழ்த்தியது ஐதராபாத் அணி
ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தின.
டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. ஐதராபாத் அணியின் தவான், வில்லியம்சன் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.
தவான் 5 ரன்களிலும், சாஹா ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்தார். வில்லியம்சன் 29, மணிஷ் பாண்டே 16 ரன்கள் எடுத்து அவுட் ஆகினர். ஷாகிப் அல் ஹசன் 2, முகம்மது நபி 14 ரன்கள், ரஷித் கான் 6 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில், யூசுப் பதான் 29 ரன்கள் எடுக்க ஐதராபாத் அனி 118 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
மும்பை அணி தரப்பில் மெக்லெனாகன், ஹர்திக் பாண்டியா, மார்கண்டே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதையடுத்து, 119 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக சூர்யகுமார் யாதவ், லெவிஸ் ஆகியோர் களமிறங்கினர்.
ஆனால், ஐதராபாத் அணியினரின் துல்லியமான பந்துவீச்சு மற்றும் சிறப்பான பீல்டிங்கால் மும்பை அணி தடுமாறியது. அந்த அணி 15 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 79 ரன்கள் எடுத்து தத்தளித்தது.
மும்பை அணியின் சூர்யகுமார் யாதவ் ஓரளவு தாக்குப் பிடித்து 34 ரன்கள் எடுத்தார். அவரை அடுத்து குர்னால் பாண்ட்யா 24 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் சொற்ப ரன்களில் வெளியேறி அதிர்ச்சி அளித்தனர். இதனால் மும்பை அணி 87 ரன்களில் ஆல் அவுட்டானது. இதையடுத்து, ஐதராபாத் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐதராபாத் அணி சார்பில் கவுல் 3 விக்கெட், ரஷீத், பாசில் தம்பி ஆகியோர் 2 விக்கெட், சந்தீப் ஷர்மா, முகமது நபி, ஷகிப் அல் ஹசன் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

Post a Comment