தமிழ் மக்கள் பேரவையின் இளைஞர் மாநாடு, எதிர்வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள நிலையில், இந்த மாநாட்டை ஒழுங்குபடுத்துவதற்கான குழு முதலமைச்சர் விக்னேஸ்வரனால் நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில், முன்னாள் அதிபர் கந்தையா அருந்தவபாலன், வடக்கு மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் உள்ளிட்டவர்கள் இடம்பெற்றுள்ளனர். இரு வாரகால இந்தியப் பயணத்தை முடித்துக் கொண்டு, முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நாடு திரும்பியவுடன், இளைஞர் மாநாட்டுக்கான குழு நியமிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்தக் குழுவில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஈ.பி.ஆர்.எல்.எப், புளொட் உள்ளிட்ட கட்சிகளைச் சார்ந்தவர்கள் யாரும் உள்ளடக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
Post a Comment