Header Ads

test

காணாமல் போனோர் அலுவலகம் அடுத்த மாதம் முதல் பாதிக்கப்பட்டோரை சந்திக்கவுள்ளது


காணாமல் போனோர் அலுவலகம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணாமல் போனோரது உறவினர்களை அடுத்த மாதம் முதல் சந்திக்க எதிர்பார்த்துள்ளது.

குறித்த அலுவலகத்தின் உறுப்பினர் ஒருவர் இந்த தகவலை வழங்கியுள்ளார்.

ஏலவே இந்த அலுவலகம் சில காணாமல் போனோரது குடும்பத்தாரை சந்தித்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதேநேரம் காணாமல் போனோர் அலுவலகத்துக்கு 28 தற்காலிக பணியாளர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

காணாமல் போனோர் தொடர்பிலும், மனித உரிமைகள் போன்ற விடயங்கள் தொடர்பான ஆர்வலர்கள் இதற்கு விண்ணப்பிக்குமாறு, குறித்த அலுவலகத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.

தற்போது தற்காலிகமாக தெரிவு செய்யப்படுகின்ற பணியாளர்கள், அவர்களது சேவையின் அடிப்படையில் எதிர்காலத்தில் நிரந்தர பணியாளர்களாக சேவை நீடிப்பு வழங்கப்படுவதற்கான வாய்ப்புகளும் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments