எதிர்கட்சி தலைவர் பதவியை பெற்றுக்கொள்ள மஹிந்த அணி மீண்டும் முயற்சி
நாடாளுமன்ற உறுப்பினர் கெஹேலிய ரம்புக்வெல்ல இதனை எமது செய்தி பிரிவிடம் தெரிவித்துள்ளார்.
பிரதமருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட, நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிர்கட்சி தலைவர் உள்ளிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிராக வாக்களித்துள்ளது.
இந்தநிலையில், எதிர்கட்சி தலைவராக இருந்து கொண்டு அரசாங்கத்திற்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தே, மஹிந்த அணி இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியும், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியும் இணைந்து ஆட்சியமைத்துள்ளது.
அதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பங்குதாரராகவுள்ளது.
தேர்தலில் 4 சதவீதமான வாக்குகளையே, தமிழ் தேசிய கூட்டமைப்பு பெற்று 16 உறுப்பினர்களை கொண்டுள்ளது.
அவ்வாறு இருக்க அந்த கட்சியில் உள்ள ஒருவர் எதிர்கட்சி தலைவராக இருக்க, தேர்தலில் 5 சதவீதமான வாக்குகளை பெற்று, 6 உறுப்பினர்களை கொண்டுள்ள ஜேவிபியின் அனுரகுமார திஸாநாயக்கவை எதிர்கட்சி அமைப்பாளர் பதவிக்கு சம்பந்தன் நியமிக்கின்றார்.
இது நாடாளுமன்ற விதிமுறைக்கு முறணானது.
தாங்கள், 55 உறுப்பினர்களை கொண்டுள்ளோம்.
ஆகவே முறைப்படி எமக்கே எதிர்கட்சி தலைவர் பதவி கிடைக்க வேண்டும்.
இதுகுறித்து தொடர்ச்சியாக சபாநாயகரிடம் வலியுறுத்தல் விடுப்போம் எனவும் கெஹெலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டார்
Post a Comment