அரசியல் கைதியாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆனந்த சுதாகரனை விடுவிக்கக் கோரி, வடக்கு மாகாண பதில் முதலமைச்சரும், வடக்கு மாகாண கல்வி அமைச்சருமான க.சர்வேஸ்வரனிடம் ஆனந்தசுதாகரனின் பிள்ளைகள் இன்று மனுக் கையளித்தனர்.
இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் வடக்கு மாகாண அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட கல்விச் சமூகத்திடம் மூன்று லட்சம் கையொப்பங்கள் சேகரிக்கப்பட்டன. அந்த கையொப்பப் படிவங்கள் அரசதலைவரிடம் சமர்ப்பிக்குமாறு இன்று கையளிக்கப்பட்டுள்ளது. மனுக் கையளிக்கும் நிகழ்வில் கல்வி அமைச்சரின் பிரேத்தியேக செயலாளர் ந.அனந்தராஜ் , கல்வி அமைச்சின் உதவிச் செயலாளர் திருமதி.சாந்தசீலன், மாகாணக் கல்விப் பணிப்பாளர் செ.உதயகுமாரும், வடக்கு மாகாணத்தின் பன்னிரெண்டு வலயக் கல்விப் பணிப்பாளர்களும், வடக்கு மாகாணத்தின் உயர் அதிகாரிகளும், வலயங்களின் பிரதிக் கல்விப் பணிப்பாளர்களும், கோட்டக் கல்விப் பணிப்பாளர்களும், இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் தாய்ச்சங்க உறுப்பினர்களும், பிராந்திய தலைவர், செயலாளர்களும், அதிபர்களும், ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.
Post a Comment