காணாமற்போனோர் பணியக ஆணையாளர், உறுப்பினர்களுக்கு வெளிநாட்டு நிபுணர்களால் கொழும்பில் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. முதல் கட்ட பயிற்சிகள் முடிவடைந்துள்ள நிலையில் இரண்டாம் கட்டப் பயிற்சி இந்த வாரம் நடைபெறவுள்ளதாகத் தெரியவருகின்றது. காணாமற்போனோர் பணியகத்துக்கான ஆணையாளர் மற்றும் உறுப்பினர்களுக்கு கடந்த மார்ச் மாதம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமனம் வழங்கப்பட்டது. நீண்ட தாமதத்தின் பின்னர் நியமனம் வழங்கப்பட்டாலும், பணியகத்துக்கான நிரந்தரக் கட்டிடம் இன்னமும் வழங்கப்படவில்லை. கடந்த 2ஆம் திகதி தொடக்கம் நாவலப்பிட்டியவிலுள்ள தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சின் கட்டிடத்தில் தற்காலிகமாக பணியகம் இயங்க ஆரம்பித்துள்ளது. ஆணையாளர் மற்றும் உறுப்பினர்கள் 7 பேருக்குமான பயிற்சிகள் வெளிநாட்டு நிபுணர்களால் வழங்கப்பட்டு வருகின்றது. காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் தேடுதல், இது தொடர்பான பணிகளில் ஏற்கனவே ஈடுபட்ட வெளிநாட்டு சிறப்பு நிபுணர்களே பயிற்சிகளை வழங்கி வருகின்றனர். நேபாளம், ஆஸ்திரேலியா, சைபிரஸ் உள்ளிட்ட நாடுகளின் நிபுணர்கள் இந்தப் பயிற்சிகளை வழங்கியுள்ளனர். இந்த வாரமும் இரண்டாம் கட்டப் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.
Post a Comment