Header Ads

test

சீருடைகளுக்கான வவுச்சர் தொடர்ந்தும் அமுலில்


பாடசாலை சீருடைகளுக்கான வவுச்சர் முறை தொடர்ந்தும் அமுலாகும் என்று கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டத்தில் நடைபெறும் ஐப்பான் எக்ஸ்போ 2018 என்ற கண்காட்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் பாடசாலை சீருடைகளுக்கான வவுச்சர்களின் பெறுமதியை அதிகரிப்பது குறித்து கவனம் செலுத்தப்படுகிறது.

அத்துடன், தரம் பத்து, தரம் 11 ஆகிய வகுப்புக்களில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு புதிய புத்தகங்களை வழங்குமாறும் கல்வியமைச்சர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

No comments