வெடிபொருளுடன் இளைஞன் கைது!
அண்மையில் விடுவிக்கப்பட்ட யாழ். வலிகாமம் வடக்கு பகுதியில் காணப்பட்ட வெடிபொருள்களை சேகரித்து செல்ல முற்பட்ட ஒருவரை இன்று (25) காங்கேசன்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
யாழ் குருநகர் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து மிகவும் அபாயகரமான சுமார் 10 கிலோ கிராம் நிறையுடைய வெடி மருந்தையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
படையினரின் கட்டுப்பாட்டிலிருந்து குறித்த பகுதி அண்மையில் விடுவிக்கப்பட்ட நிலையில், அங்கிருந்த அபாயகரமான வெடிபொருட்களை சேதப்படுத்தி, குறித்த வெடிமருந்தை சேகரித்து அதனை வேறு பகுதிக்கு எடுத்துக் செல்ல குறித்த நபர் முற்பட்டுள்ளார்.
Post a Comment